Sunday, August 21, 2011

பாத்து நாட்களுக்கு முன்பு சங்கரன் கோயில் தபசு கோயிலுக்கு வேண்டுதலுக்கு சென்றிருந்தோம் .நான் , என் மனைவி, என் சின்ன அண்ணி , மற்றும் பெரிய அண்ணி , கூடவே எனது திருப்பூர் நண்பர் ஜெயபாலன் மற்றும் அவர் மனைவி விஜயா என்று மொத்தம் ஆறு பேர் . எனது அண்ணன் ( சின்ன அண்ணியின் கணவர் என் உடன் பிறந்த மூத்த சகோதரர் . அவருக்கு ரயில்வே உத்தியோகம் . லீவு இல்லை , எனவே சுலபமாக கழண்டு கொண்டார். பெரிய அண்ணி கணவர் உடன் இல்லை, அவருடன் 22 ஆண்டுகளாக இல்லை .
எல்லோரும் திட்டமிட்டபடி அதி காலை கிளம்புவதாக உறுதி செய்து கொண்டு தூங்க போகவில்லை . பேச ஆரம்பித்தோம் . என்ன பேசினோம் என்பதை சொல்வதற்கு இல்லை . வழக்கம் போல் மிக தாமதமாக கிளம்பினோம்.

Friday, April 1, 2011

தேதி நினைவில்லை - நம் வழக்கு
நீதி மன்றம் படியேறிய தினம்
என் நினைவடுக்குகளில் தேங்க வில்லை - உன்
ஆவேச குற்றசாட்டுகள்- என் ஊதாரி தனத்தால்
சேமிக்கவில்லை உன் உள்ள குமுறல்களை !!!
கண்களில் வழியும் நெருப்பை கேள்வியாக்கினாய்
விடை தேட எனக்கு தெரியவில்லை - தோற்றவன்
அத்துணை நாட்களும் - நீ பெற்ற உன் சார்பு
தீர்ப்பும் வரை நான் தேடி கொண்டிருந்தேன் - உன் கண்களில்
நம் பழைய காதலை !!!

Saturday, February 12, 2011

அய்யா கருணாநிதி ஆப்பு ரெடி

கலைஞர் டிவி இப்போ கலக்கத்தில்
அய்யா சரத்து நீ பெருசு சொல்லி கொடுத்த மாதிரி எத்தனைமுறை அறிக்கை விட்டாலும் ஆப்பு ரெடி தேர்தல் வரும் வரை ஆப்புகள் தொடரும் . தேர்தலில் மொத்த ஆப்பும் மொத்தமா விழும் . அய்யா உங்களுக்கு வாட்டர்லு தயாரா இருக்கு . என்ன அங்கேயும் குடும்பத்தோட இருக்கலாம்.